×

வாகன ஓட்டிகள் அவதி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப். 10: அரசாணை 145யை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் இதயதுல்லா. இளையராஜா, அறிவுடைய நம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 145யை உடனடியாக திரும்ப பெற வேண்டும். காவல்துறையால் புனையப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியர், ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.

தேசிய புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ரவிச்சந்திரனின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Motorists ,Awati Jakdo ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...